சமயபுரத்தில் அருகே மூன்று கார்களில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்கள் வட மாநிலத்தவர் உட்பட நாலு பேர் கைது

திருச்சி சமயபுரம் அருகே கார்களில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, வடமாநிலத்தவர் உள்பட 4 பேரை
கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம்,
சமயபுரம் வழியாக கார்களில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சமயபுரம்
போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் DSP. (பொறுப்பு) திரு.சீனிவாசன் தலைமையில் சமயபுரம் இன்ஸ்பெக்டர் திரு.கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர்,முத்துசாமி, முதல் நிலை காவலர் செயலரசு, காவலர்கள் தமிழரசன், பாண்டியராஜன், பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் காலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

- Advertisement -

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 3 கார்களை மடக்கி போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அந்த கார்களின் பின்பகுதியில் மூட்டை, மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 கார்களையும் போலீசார் பறிமுதல்
செய்தனர். மேலும், கார்களை ஓட்டி வந்த டிரைவர்கள் உள்பட 4 பேரை
போலீசார் சமயபுரம் காவல் நிலையம்
அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அவர்களில் ஒருவர் சமயபுரம்
சுங்கச்சாவடி அருகே ஹரண் என்ற பெயரில் டீக்கடை வைத்திருக்கும் புதூர் உத்தமனூர் ராகவேந்திரா நகரை சேர்ந்த இளையராஜா (வயது 41). தச்சன்குறிச்சியை சேர்ந்த முனியாண்டியின் மகன் மணிராஜ் வயது (34) இவர்கள் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வந்ததாக சிறுகனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுள்ளது.மேலும் இரண்டு பேரும்
(34), ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் மாவட்டத்தை சேர்ந்த காமன்சிங்கின் மகன் மகிபால்சிங் வயது (36),பெங்களூரு மகடி ரோடு பகுதியை சேர்ந்த மங்கள் சிங்கின் மகன் அமீர்சிங் (38) என்பது தெரியவந்தது.
இவர்கள் 4 பேரும் பெங்களூருவில் இருந்து 3 கார்களில் சுமார் 1,000 கிலோ
போன்ற புகையிலை பொருட்களை சிறு,சிறு பொட்டலங்களாக சமயபுரம் சுங்கச்
சாவடி வழியாக கடத்திச்சென்று, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ய இருந்ததும்,மேலும் இவர்கள் சமயபுரம் வழியாக திருச்சி மாவட்டத்திற்கு பலமுறை புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார், 3 கார்களையும், அதில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலைலான பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் 4,பேரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை
நடத்தி வருகின்றனர்.

தலைமைநிருபர்.S.வேல்முருகன்.

Leave A Reply

Your email address will not be published.