திருச்சி மாகர காவல் துறையில் கோடை வெயிலில் கள பணியில் காவல் துறையினருக்கு கண்ணுக்கு கூலிங்க்ளாஸ் வழங்கப்பட்டது
.

திருச்சி மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர் ம ற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்கள் கண்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் குளிர் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
திருச்சி தில்லைநகர் வினோத் *EYE CAR * மருத்துவமனை இலவசமாக 150 முதல் 200 காவலர்களுக்கு கூலிங் கண் கண்ணாடிகளை MD. டாக்டர். வினோத் வழங்கினார். திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர்M.சத்தியபிரியா IPS. பங்கேற்று 200க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கூலிங் கண்ணாடிகளை வழங்கினார். காவல் ஆணையர், உதவி ஆணையர், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோரும் கண்ணாடிகளை அணிந்து கொண்டனர்.
மேலும் ஸ்ரீரங்கம் ரோட்டரி கிளப் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இணைந்து குடிநீர் மற்றும் பழரச பாட்டில் மற்றும் மோர் ஆகியவை வழங்கினர்.
சிறப்பு நிருபர். மூ.பாண்டியராஜன்.


