என்மண்என்மக்கள் யாத்திரை திருவையாறில் பஜக தலைவர் அண்ணாலை மக்கள்படைசூழ காரசாரபேட்டி.

70 – 80 ஆண்டுகள் அரசியல் காரணங்களுக்காக நிறைய விஷயங்களை காவிரியில் விட்டு கொடுத்து விட்டோம். தண்ணீர் குறைய குறைய தூரத்தில் உள்ள நிலங்கள் தரிசாக மாறிவிட்டது. 1974 முதல் தொடர்ந்து உரிமைகளை விட்டுக் கொடுத்ததால் தண்ணீர் குறைந்து நெல் சாகுபடி குறைந்து உள்ளது என அண்ணாமலை பேட்டி.
என்மண் என் மக்கள் நடைபயணம் திருவையாறு தொகுதிக்கு கட்டுப்பட்ட நடு காவேரியில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினார்.


முன்னதாக காவிரியின் கிளை நதியான குடமுருட்டி ஆற்றின் இறங்கி நடுவில் உள்ள மணல் திட்டில் அண்ணாமலை
காவிரிக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் கருப்பூர் பகுதியில் விவசாயிகளுடன் விளை நிலத்தில் இறங்கி நாற்று நடவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,தமிழகத்தில் 112 வது தொகுதியாக திருவையாறு டெல்டா பகுதியில் வந்துள்ளோம். குறிப்பாக டெல்டாவில் யாத்திரையை தொடங்குவதற்கு முன்பு தாய் காவேரிக்கு பூஜை செய்து காவேரி எப்போதும் போல வற்ற கூடாது. டெல்டாவில் உள்ள எல்லா விவசாய பெருமக்களும் நிரந்தரமாக காவிரி நீர் பெற்று 365 நாட்களும் கிடைக்க வேண்டும். ஆண்டவனிடம் வேண்டுதல் வைத்து காவிரிக்கு பூஜை செய்துவிட்டு இங்கு இருந்து யாத்திரையை தொடங்குகிறோம். டெல்டாவில் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. இந்தியாவின் நெற்களஞ்சியம் இது. கடினமாக உழைத்து இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் உண்ணுவதற்கு அரிசி கொடுக்கக்கூடிய விவசாய பெருமக்களுக்கு மோடி துணை நிற்கிறார்.
கடந்தாண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை கிட்டத்தட்ட 8 லட்சம் டன் மத்திய அரசின் எப்சி நெல் கொள்முதல் செய்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு 3 லட்சம் டன் குறைந்துள்ளது. வெறும் ஐந்தே கால் லட்சம் தான் வாங்கி உள்ளோம்
எப்படி இந்த மூன்று லட்சம் குறைந்துள்ளது. காரணம் காவேரியில் தண்ணீர் இல்லை, காவேரியில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் மகசூல் குறைந்து. இங்க இருக்கக்கூடிய விவசாய பெருமக்களுக்கு நெல் விளைச்சல் குறைந்துள்ளது. நேரடியாக மூன்று லட்சம் டன் குறைந்துள்ள. காவேரி தண்ணீர் வரவில்லை என்றால் என்ன ஆகும் என்பதற்கு இந்த ஒரு ஆண்டு உதாரணம். 3 லட்சம் டன் குறைந்து.
மீத்தேன் – நிலக்கரி எந்த திட்டமும் வரக்கூடாது என்று உறுதியாக உள்ளோம். விவசாய பெருமக்களுக்கு துணையாக இருப்போம். ஆனால் மாநில அரசு விவசாய பெருமக்களை வஞ்சிக்கிறது. காவிரியை பெற்றுத் தர முடியாத மாநில அரசு உள்ளது. இந்திய கூட்டணியில் இருக்கக்கூடிய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழக முதல்வர் பெங்களூர் வரை சென்று காவிரி குறித்து வாய் திறக்கவில்லை. 2007 தீர்ப்பு வந்தும் ஆணையத்தை அமைப்பதற்கான தைரியம் இல்லை. ஆனால் 2018 ஆம் ஆண்டு காவிரிநீர் ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. காவிரி ஒப்பந்தத்தை கருணாநிதி புதுப்பிக்கவில்லை, அதனால் கர்நாடக அரசு அணை கட்டியது. 70 – 80 ஆண்டுகள் அரசியல் காரணங்களுக்காக நிறைய விஷயங்களை விட்டு கொடுத்து விட்டோம். தண்ணீர் குறைய குறைய தூரத்தில் உள்ள நிலங்கள் தரிசாக மாறிவிட்டது. 1974 முதல் தொடர்ந்து உரிமைகளை விட்டுக் கொடுத்ததால் தண்ணீர் குறைந்து நெல் சாகுபடி குறைந்து உள்ளது என தெரிவித்தார்.
நிருபர்.சக்திவேல்


