தேனிமாவட்டம் காவல்துறை சார்பாக தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
Election security precautions taken by Theni District Police
தேனிமாவட்டம் காவல்துறை சார்பாக தேர்தல் Dr.B.சினேஹாப்ரியா ,IPS.தலைமையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

தேனி மாவட்டம்,04.02.2026 அன்று
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தேனி மாவட்ட காவல்துறை Election Cell சார்பில், பதட்டமான (Vulnerable) வாக்குச்சாவடிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
மேற்படி கூட்டத்திற்கு, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா ,IPS., அவர்கள் தலைமையில், தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுதல், பாதிப்பு உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுதல் ஆகியவை குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அசாதாரண நிலைகளைக் கட்டுப்படுத்துதல், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்குதல் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், தேனி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்.V.வேல்முருகன்.

