கடலூர் குற்றதடுப்பு நடவடிக்கையில் அதிரடி DSP.பிரபு.

கடலூர் மாவட்டம் குற்றதடுப்பு நடவடிக்கையில் அதிரடி DSP.பிரபு.

கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் DSP. திரு.பிரபு அவரவர்கள் சிறப்பாக பணிபுரிந்ததற்கு கேடயத்துடன் நினைவு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார்கள் சமூகநல அமைப்பினர் என்பதுகுறிப்பிடதக்கது.

கடலூர் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கல்வி மற்றும் விளையாட்டுத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாகவும், இவருடைய சிறந்த பேச்சுத்திறமையால் அனைத்து மாணவர்களையும் நல்வழிப்படுத்துவண்ணம் ஒருநல்ல வழிகாட்டுதலாக இருந்து வருகிறார். மேலும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வுகளை தன் பேச்சுத்திறமையால் நல்வழிபடுத்தி வருகிறார்.

- Advertisement -

அதனால் இவர் மாணவர்களுக்கு கொடுக்கும் விழிப்பணர்வு பேச்சு திறமையை அறிந்த கடலூர் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் முதல்வர்கள் இவருடைய அலுவலகம் வந்து எங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக வந்து மாணவ மாணவியர்களுக்கு சிறப்பான விழிப்புணர் அறிவுரை வழங்கவேண்டுமாய் அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

காவல் துணைக்கண்காணிப்பாளர் அலுவலகம் வருவதற்கு முன் மனுகொடுப்பவர் எவரும் இருக்கமாட்டார்கள். ஆனால் DSP.பிரபு அவர்கள் அலுவலகத்துக்கு வந்தவுடன் எங்கிருந்து வருவார்களோ எனத்தெரியாது மனுதாரர் மனுக்கள் கொடுப்பதற்கு காவல் நிலையத்தில் செல்லாமல் DSP.அலுவலகத்திற்கு வந்துவிடுகிறார்கள்.

அதற்கு காரணம் அவர் குறைதீர்வுகாணவேண்டி மனு கொடுப்பவர்களை தமது அன்பான மற்றும் நேர்த்தியான விசாரணையாலும் இருதரப்பினர்களையும் அழைத்து அறிவுரைகூறி ஒரு சுமூக தீர்வினை கொடுத்து வருகிறார். இதனால் அவரவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டு மனுதாரர்கள் சந்தோஷமாக செல்கின்றனர். மேலும் கணவன் மனைவி பிரச்சனைகளை தீர்வுகாண தமது அன்பான விசாரணையாலும் அவர்ளுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி அவர்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு அறிவுரை வழங்கி வருகிறார்.

இதனால், இவர் கடலூர் உட்கோட்டத்தில் எவ்வித அசம்பாவித மற்றும் பிரச்சனையை தவிர்க்கும் விதமாக சுமூகமாக சட்டம் ஒழுங்கை பேணுவதற்கும், அமைதியான முறையில் நடப்பதற்கும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பக்க பலமாக குற்றதடுப்பு நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறார்.

சிறப்புநிருபர்.பா.முத்துகுமரன்.

Leave A Reply

Your email address will not be published.