26-06-25.ஜுன் சர்வதேச போதைபொருள் ஒழிப்பு தினத்தைமுன்னிட்டு மேலகல்கண்டார் கோட்டை அரசு பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திரளாக மாணவர்கள் பங்கேற்பு.
போதைப் பொருள் ஒழிப்பு தினமாக இன்று மேல கல்கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருளுக்கு எதிரான நிகழ்ச்சியாக எங்க ஏரியா உள்ளே வராதே என்ற நிகழ்ச்சி நடைபெற்றது .
பள்ளி தலைமையாசிரியர் சற்குணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதியும் ஆன வணக்கத்திற்குரிய பிரபு அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு say no to drugs என்னும் தலைப்பில் உரையாற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
டிபன்ஸ் கவுன்சிலின் மூத்த வழக்குரைஞர் மதிப்பிற்குரிய சரபோஜி அவர்கள் எச்சரிக்கையா இல்லாமல் போனால் ஏமாந்து விடுவீர்கள் ஆகவே தீயவை தீயினும் அஞ்சப்படுவதால் தீயவற்றை விட்டு விலகி இருங்கள் என்று போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் அனைவரும் say no to drugs என்னும் பேட்ஜ் அணிந்து போதைப் பொருளுக்கு எதிரான உறுதி மொழியை ஏற்றனர்
நிகழ்ச்சியைத் தொடர்ந்து தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியை அருணா ஆகியோரது தலைமையிலான மாணவர்கள் குழு ஒன்று பள்ளியிலிருந்து 300 மீட்டர் தூரத்திற்கு உட்பட்ட கடைகளுக்கு சென்று போதைப் பொருள் விற்பனை கூடாது என்கின்ற கருத்தை வலியுறுத்தினர்.
நிருபர்.B.ஶ்ரீநிவாசன்.