கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட SP.பிரதீப் IPS நேரில் ஆய்வு

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட SP.பிரதீப் IPS நேரில் ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது . இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர் . கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு இயற்கைகளில் காட்சிகளை கண்டு ரசித்தும் செல்கின்றனர் . இந்த நிலையில் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு வருகிறது . இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக கொடைக்கானல் நகர் பகுதிகளாக இருக்கும் அண்ணா சாலை, ஏரி சாலை , பாம்பார் புரம் சாலை , அப்சர்வேட்டரி பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரதீப் IPS நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . காவல் அதிகாரிகளுடன் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனையும் மேற்கொண்டார். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .

இதனை தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் இடையே ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கொடைக்கானல் காவல்துணை கண்காணிப்பாளர் DSP.மதுமதி அவர்கள் காவல்ஆய்வாளர் திரு.பாஸ்கரன் உடன் இருந்தார்.

நிருபர்.R.குப்புசாமி.

Leave A Reply

Your email address will not be published.