திண்டுக்கல் சிறப்பான காவல்பணிக்காக குடியரசுதலைவர் பதக்கம் பெற்றவர்களுக்கு மாவட்ட SP.A.பிரதீப் IPS பாராட்டு
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் சிறப்பான காவல்பணிக்காக குடியரசுதலைவர் பதக்கம் முதலமைச்சர்பதக்கம் பெற்றவர்களுக்கு மாவட்ட SP.A.பிரதீப் IPS பாராட்டு.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக காவல்பணிபுரிந்தமைக்காக இந்திய குடியரசு தலைவர் பதக்கம் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் DSP.திரு.முருகேசன் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பதக்கம் திண்டுக்கல் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சுமதி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் பதக்கம் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.அமுதா அவர்களுக்கும், அண்ணா பதக்கம் நிலக்கோட்டை சிறப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.செல்வம் அவர்களுக்கும் (23.08.2024) அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது.
இதனையடுத்து (27.08.2024) சிறப்பாக காவல்பணிபுரிந்தமைக்காக பதக்கம் பெற்றவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.A.பிரதீப்., IPS, அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
நிருபர்.குருசரவணன்