திருச்சிமாவட்டத்தில் நீதிபதி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மாவட்ட நீதிபதி பாபு முகாமினை துவக்கி வைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் நீதிபதி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மாவட்ட நீதிபதி பாபு முகாமினை துவக்கிவைத்தார்.

திருச்சி வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் மாவட்ட நீதிபதி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதற்கான தொடக்கவிழாவில் கலந்து கொண்ட மாவட்ட நீதிபதி திரு.பாபு அவர்கள் இலவச பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.

விழாவில் முகாம் ஏற்பாட்டாளரும், திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளருமான பி.வி.வெங்கட், தலைவர் முல்லை சுரேஷ், பயிற்றுனர் சுவாமிநாதன், சங்க துணைத் தலைவர் K.T.சிவகுமார், அவர்கள் மற்றும் பொருளாளர் சசிகுமார், மற்றும் சங்க நிர்வாகிகள் பிரபு, விஜய் நாகராஜன், வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.


