அம்மா என்ற சொல் குறித்து திருப்பூர் மாநகராட்சித் தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாவில் மாவட்டக் கல்வி அலுவலர் கோ. பழநிபேச்சு
29.03.2025 சனிக்கிழமை திருப்பூர் மாநகராட்சித் தொடக்கப்பள்ளி செல்லம்மாள் காலனியில் ஆண்டுவிழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. வே. நாகராஜ் கணேஷ் குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி. ஜெ. சுகிர்தா அவர்கள் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார், மாவட்டக் கல்வி அலுவலர் திரு. கோ. பழநி அவர்கள் சிறப்புரை வழங்கினார். திருப்பூர் வடக்கு வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. கு.சின்னக்கண்ணு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாமன்ற உறுப்பினர் திரு.இரா.நாகராஜ் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.பொன்.பழனிச்சாமி அவர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் திருமதி. தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டக் கல்வி அலுவலர் திரு. கோ. பழநி அவர்களின் சிறப்புரையில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் தாயை அம்மா என்று அழைக்கிறோம். அ என்ற சொல் உயிர் எழுத்துக்களில் முதல் எழுத்து. அது உயிரைக் குறிக்கிறது. ம் என்ற சொல் மெய்யெழுத்துக்களில் பத்தாவது எழுத்து. அது ஒரு தாய் தன் குழந்தையைப் பத்து மாதம் தன் வயிற்றில் சுமந்ததை குறிப்பதாகக் கொண்டால் மா என்ற எழுத்து உயிர் மெய் எழுத்தாகி, உயிரும் மெய்யும் கலந்தது தான் இந்த வாழ்க்கை என்பதை அழகுடன் கூறினார்.
யுவராஜ் குடியிருப்பு வளாகத்தின் முன் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மாணாக்கர் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நடனமாடினர். அத்தோடு தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சு, பாடல் பாடுதல்,17,18,19 பெருக்கல் வாய்ப்பாடுகளைத் தலைகீழாகப் சொல்லுதல் என மிகச் சிறப்பாக செய்தனர். அவர்களுக்கு பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் சிலம்பம்,கராத்தே,ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணாக்கருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மாவட்டக் கல்வி அலுவலர் திரு. கோ. பழநி அவர்களும் திருப்பூர் வடக்கு வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. கு.சின்னக்கண்ணு அவர்களும் மாணாக்கருக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் தி.மு.க செயலாளர் செல்வம், அ.தி.மு.க. அவைத் தலைவர் கார்த்திக், தமிழக வெற்றிக் கழக மாவட்டத் தலைவர் பாலமுருகன், கல்விக்குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியை நா. தீபா அவர்கள் நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்வில் பெற்றோர்களும், பொது மக்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வினை ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மைக் குழு , சோழன் தமிழ் அறக்கட்டளை உறுப்பினர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
தலைமைநிருபர்.A.மாரிராஜா.