திருச்சி உலக தாய்பால் வார விழாவை முன்னிட்டு தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி ஊட்டச் சத்து பெட்டகத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர் M.பிரதீப்குமார் IAS
திருச்சி உலகதாய்பால் வார விழாவை முன்னிட்டு தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி ஊட்டச் சத்து பெட்டகத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர் M.பிரதீப்குமார் IAS

திருச்சிராப்பள்ளி மாவட்டம், YWCA மகளிர் தங்கும் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு (02.08.2023) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் M.பிரதீப்குமார் IAS கலந்து கொண்டு, தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி கலந்துரையாடி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.சு.லெட்சுமி, திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.நேரு, சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.சுப்பிரமணி, மாவட்ட திட்ட அலுவலர் (பொ) (ஒ.கு.வ.தி) மா.நித்யா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் காஞ்சனா, மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள் வசந்தா, உஷாரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்புநிருபர்.S.மணிகண்டன்.

