நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு தினவிழாவை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ்IAS.துவக்கி வைத்தார்
நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு தினவிழாவை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் IAS.துவக்கிவைத்தார்.

நாகையில் தமிழ்நாடு தினம் கொண்டாட்டத்தினை முன்னிட்டு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது
மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என அறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தினத்தை முன்னிட்டுதமிழ்நாடு தினமாக மாநில அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது மேற்படி தமிழ்நாடு தினத்தை கொண்டாடும் வகையிலும், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நாகையில் புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி அரங்கத்தை நாகை மாவட்ட ஆட்சியர் திரு ஜானிடாம் வர்கீஸ் IAS அவர்களும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ் சிங் IPS அவர்களும் திறந்து வைத்தார்கள். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையிலும், மாண்புமிகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ஆற்றிய சேவைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான புகைப்பட தொகுப்புகளை அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இணைஆசிரியர்.மதனகோபால்.


