.
திருப்பத்தூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
காவல் நிலையங்களில் முறையான
தீர்வு காணப்படாத மனுக்கள் மீது
மக்கள் குறை தீர்வு கூட்டம்
வேலூர் சரக
காவல் துறை
துணைத் தலைவர் DIG.
Dr. M.S. முத்துசாமி,IPS.,
தலைமையில்-
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS.,
அவர்களின் முன்னிலையில் -திருப்பத்தூர் மாவட்ட புதிய காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமில் பெறப்பட்ட திருப்தி பெறாத
12 மனுதாரர்களையும்,
எதிர் மனுதார்ர்களையும்
நேரில் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள
துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.புதிதாக 39 புகார் மனுக்களை பொதுமக்களிடம் நேரடியாக பெற்றுக்கொண்டார்கள்.
மேலும்வாரந்தோறும் புதன்கிழமைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல்
புதிய அலுவலகத்தில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் மனுக்களின் விசாரணையில் திருப்தி பெறாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.,
என தெரிவித்தார்கள்.
முதன்மைஆசிரியர்.S.முருகானந்தம்.