காவலர்கள் வாட்ஸ் ஆப் குழு அமைத்து செயல்பட வேண்டும் DGP. சங்கர்ஜிவால் IPS உத்தரவு.

காவலர்கள் வாட்ஸ் ஆப் குழு அமைத்து செயல்பட வேண்டும் DGP. சங்கர்ஜிவால் IPS உத்தரவு.

 

- Advertisement -

தமிழ்நாடு காவல்துறை நலனுக்காக காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் கடைசி காவலர்கள் வரை வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்படுமாறு தமிழககாவல்துறை DGP.சங்கர் ஜிவால் IPS உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் DGP. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு காவல்துறை நலன் (Tamilnadu police welfare) என்ற பெயரில் உருவாக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் DGP.உள்ளிட்ட தலைமை அதிகாரிகள் இருப்பார்கள். சென்னையை பொறுத்தவரையில் இணை ஆணையர் வெல்ஃபேர் தலைமையில் வாட்ஸ் அப் குரூப் அமைத்து அதில் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்க வேண்டும். அதன்பின் துணையாணையர் இவர்கள் தலைமையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து அதில் உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். உதவி ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என கடைசி காவலர்கள் வரை இருக்க வேண்டும். மற்ற நகரங்களை பொரறுத்தவரையில் துணை ஆணையர் தலைமையில் வாட்ஸ் அப் குரூப் அமைக்கப்பட்டு உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும் என DGP.அறிவுறுத்தியுள்ளார்.

முதன்மைஆசிரியர்.S.முருகானந்தம்.

Leave A Reply

Your email address will not be published.