2090 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த மதுரை காவலர்களுக்கு ரூ.1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய DGP Dr.C.சைலேந்திரபாபு, IPS

 

- Advertisement -

மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆந்திராவிலிருந்து போலியான பதிவு எண் கொண்ட சரக்கு வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தி வரப்பட்டு தூத்துக்குடி மாவட்டம், மேலவர் புதுக்குளம் என்ற கிராமத்தில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்த தகவலையடுத்து விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த சரக்கு வாகனங்களை சோதனை செய்த போது சாக்கு மூட்டையில் ரூ. 2 கோடி மதிப்புடைய 2090 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தல் கும்பலை கூண்டோடு கைது செய்த காவலர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர்DGP. Dr.C.சைலேந்திரபாபு, IPS ., அவர்கள் DGP. அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பணவெகுமதியும், நற்சான்றிதழும் வழங்கி அவர்களுக்கு ரூ.1 இலட்சம் பரிசு வழங்கி பாராட்டினார்.

Reporter.Bheemaraj.

Leave A Reply

Your email address will not be published.