தேவகோட்டை வீட்டில் நகைகொள்ளை கொள்ளையர்கள் கைது தேவகோட்டை காவல்துறையினர் அதிரடி

தேவகோட்டை வீட்டில் நகைகொள்ளை கொள்ளையர்கள் கைது தேவகோட்டை காவல்துறையினர் அதிரடி.SP.பாராட்டு.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தில்லை நகர் 6-வது வீதியைச் சேர்ந்த ஞானசேகர், த/பெ.ராயர்;, தில்லை நகர் 6-வது வீதி, தேவகோட்டை, என்பவரின்; வீட்டில் 20.11.2024-ம் தேதி அன்று அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டை உடைத்து வீட்டில் இருந்த நகைகளை திருடிச் சென்று விட்டதாக ஞானசேகர் என்பவர் 20.11.2024-ம் தேதி அளித்த புகாரின் பேரில் தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் குற்ற எண்:212/24, U/s 331(3), 305(A) BNS- ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ், IPS., அவர்களின் உத்தரவின் பேரில், தேவகோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்DSP. திரு.பார்த்திபன், அவர்கள் மேற்பார்வையில், காரைக்குடி வடக்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பிரேம் ஆனந்த், தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு.கணேசமூர்த்தி, மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.இளையராஜா, சார்பு ஆய்வாளர் திரு.சரவணக்குமார், சார்பு ஆய்வாளர் திரு.வினோத், சார்பு ஆய்வாளர் திரு.நமச்சிவாயம் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.உதயக்குமார் ஆகியோர்கள் தலைமையிலான தனிப்படையினர் விரல் ரேகை மற்றும் CCTV காட்சிகள் தொழில் நுட்ப உதவியுடன்; குற்றவாளிகளை தேடிவந்தனர்.

- Advertisement -

CCTV காட்சிகள் மூலம் எதிரிகள் அடையாளம் காணப்பட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டையைச் சேர்ந்த 1.நாகராஜ் (எ) பூனை நாகராஜ், திருச்சி மாவட்டம், நாகமங்கலத்தைச் சேர்ந்த 2.பொன்ராஜ் (எ) ராஜா (எ) அழகு, ஆகியோர்கள் அடையாளம் கண்டு தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் அவர்களால் கைது செய்யப்பட்டு அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளிடமிருந்து 91, பவுன் தங்க நகைகள் கைப்பற்றபட்டது.

எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தேவகோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன், அவர்கள் மற்றும் அவரது அணியினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி, சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கியுள்ளார்கள்.

மேலும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ், IPS., அவர்கள் எச்சரித்துள்ளார்.

நிருபர்.சிவகுருநாதன்.

Leave A Reply

Your email address will not be published.