நெமிலி காவல் நிலைய  காவலர் தனசேகரனுக்கு கல்வி அலுவலர் உஷா சான்றிதழ் கேடயம் வழங்கி பாராட்டு.

நெமிலி காவல் நிலைய  காவலர் தனசேகரனுக்கு கல்வி அலுவலர் உஷா சான்றிதழ் கேடயம் வழங்கி பாராட்டு.

- Advertisement -

ராணி பேட்டை மாவட்டம் அரக்கோணம் நெமிலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பனப்பாக்கம், நெமிலி, சயனபுரம், சேந்தமங்கலம், பள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வும், பிளாஸ்டிக் உபயோகத்தை தடுப்பதை குறித்த விழிப்புணர்வும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நிமிலி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் தனசேகரன் என்பவர் தொடர்ந்து செய்து வந்தார் .

மேலும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் மகளிர் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நெமிலி காவல் நிலைய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு பணி செய்து வந்தனர் இந்நிலையில் இதனை பாராட்டும் வகையில் பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் உஷா அவர்கள் நெமிலி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் தனசேகரன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கி பாராட்டினை தெரிவித்தார்.

மேலும் காவலர் தனசேகரன் அவருக்கு நெமிலி காவல் நிலைய காவல் ஆய்வாளர் லட்சுமிபதி உதவி காவல் ஆய்வாளர் லோகேஷ் ,ஜெயராஜ் குமார், சங்கர் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.