மாநில அளவில் காவல் துறையினருக்கான விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு திருச்சிமாநகர காவ ல் ஆணையர் காமினி IPS பாராட்டு.
மாநில அளவில் காவல்துறையினருக்கானவிளையாட்டுபோட்டியில் பதக்கங்கள்வென்றவீரர்களுக்கு திருச்சிமாநகர காவ ல்ஆணையர் காமினி IPS பாராட்டு.
தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னை ஆர்.ஆர்.மைதானத்தில் கடந்த 07.09.2023-ந்தேதி முதல் 09.09.2023-ந்தேதி வரை இரண்டு தினங்கள் நடைபெற்றது. இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு மண்டலத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் சுமார் 790 நபர்கள் கலந்து கொண்டனர்.
இதில் திருச்சி மத்திய மண்டல அணி சார்பில் மல்யுத்தம், பழுதூக்குதல், கபாடி, பாடிபில்டிங், பவர் லிப்டிங் மற்றும் குத்துசண்டை ஆகிய போட்டி பிரிவுகளில் சுமார் 97 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டார்கள். மேற்கண்ட போட்டிகளில் 13 தங்கம் பதக்கம், 41 வெள்ளி, 25 வெண்கலம் என திருச்சி மத்திய மண்டல அணி மொத்தம் 79 பதக்கங்களை வென்று, மாநில அளவில் ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தை மத்திய மண்டல அணியினர் கைப்பற்றினார்கள்.
திருச்சி மாநகர காவல்துறை சார்பாக மேற்கண்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்று, மத்திய மண்டல ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களை 12.09.2023-ந்தேதி மாநகர காவல் ஆணையரகத்திற்கு நேரில் வரவழைத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.N.காமினி, IPS.,அவர்கள், பதக்கங்களை பார்வையிட்டும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, வெகுவாக பாரட்டினார்கள்.சிறப்பு நிருபர்.மு.பாண்டியராஜன்.