திருச்சிமாநகரில் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ காவல்ஆணையர். M.சத்தியபிரியா IPS அதிரடி நடவடிக்கை
திருச்சி மாநகரில் பொதுமக்கள் திருட்டு,வழிபறி, கொலை,கோள்ளை,போன்ற சம்பவங்களால் பாதிப்படையாமல் பாதுகாப்பு விழிப்புணர்வுபெற மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா,IPS அவர்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகரத்தில் பொதுமக்களிடமிருந்து காணாமல்போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
அதன்பேரில் காணாமல் போன செல்போன்கள் பற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுத்ததில், கண்டோன்மெண்ட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 47 செல்போன்களும், தில்லைநகர் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 45 செல்போன்களும், காந்திமார்க்கெட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 43 செல்போன்களும், கே.கே.நகர் சரக காவல்நிலைய எல்லையில் 34 செல்போன்களும், ஸ்ரீரங்கம் சரக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 27 செல்போன்களும், பொன்மலை சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 3 செல்போன்களும், மாநகர சைபர் கிரைம் செல்லில் பெறப்பட்ட புகாரில் 2 செல்போன்கள் உட்பட ரூ.32 ,லட்சம் மதிப்புள்ள பல்வேறு கம்பெனிகளின் 201 ஆன்ட்ராய்டு செல்போன்கள் கண்டுபிடித்து மீட்க்கபட்டுள்ளது.
26.05.23-ந்தேதி திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் தொலைந்து போய் மீட்கபட்ட 201 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர்M.சத்திய பிரியா,IPS அவர்கள் ஒப்படைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையர் பேசுகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் செல்போன் இன்றியமையாத ஒன்றாக இருப்பதாகவும், செல்போனில் அனைவரும் பல தகவல் சேகரித்து வைத்துள்ளதாகவும், அது தொலைந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவரவர் கடமை என்றும், பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது செல்போன்களில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் மேலும்பொதுமக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுடன் செயல்ப்பட்டு குற்றசம்பவங்களை தடுக்க காவல்துறையுடன் ஒத்துழைக்கவேணடும் என்று அறிவுறுத்தினார்கள்.
மேற்படி செல்போனை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் செல்போனை கண்டுபிடித்து தந்தது மூலம் பொக்கிஷமான பழைய நினைவுகளை திரும்ப பெற வழிசெய்து தந்துள்ளீர்கள் என கூறி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கும், மாநகர காவல்துறைக்கும் தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் காவல்துணை ஆணையர் திரு.சுரேஷ்குமார் அவர்கள் தலைமையிடம், காவல்துணை ஆணையர் திரு.அன்பு அவர்கள் வடக்கு மற்றும் காவல் உதவி ஆணையர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்ஆளிநர்கள் கலந்துக்கொண்டார்கள்.
சிறப்பு.நிருபர்.மு.பாண்டியராஜன்.