திருச்சி மாநகர காவல் துறை சார்பில் காவல் துறையினரின் சீருடையில் பொருத்தும் சிறியரக அதி நவீனகேமரா காவல் ஆணையர் M.சத்தியபிரியா IPS துவங்கி வைத்தார்.

 

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் பகுதியில் காவல்துறையினரின் ரோந்து வாகனங்களில் செல்லும் போலீசாரின் சீருடையில் பொருத்திக்கொள்ளும் வகையில் சிறிய  ரக நவீன கேமரா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

 

- Advertisement -

நிகழ்ச்சிக்கு மாநகர காவல்ஆணையர்.M. சத்தியபிரியா IPS தலைமை தாங்கி, போக்குவரத்து போலீசார் மற்றும் ரோந்து போலீசார் 56 பேருக்கு சிறிய ரக நவீன கேமராக்கள் வழங்கினார்.

போலீசாரின் ரோந்து பணிகளை தீவிரமாக்க இந்தசிறிய  ரக நவீன கேமராக்கள் ரோந்து போலீசாரின் சீருடையில் பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களின் மூலம் 3 நாட்கள் தொடர்ச்சியாக பதிவு செய்து கொள்ள முடியும். இது 64 ஜி.பி. மெமரி திறன் உள்ளது. அவ்வப்போது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பேக்கப் எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

குறைந்தபட்சம் 5 மீட்டர் தொலைவில் நடைபெறுவதை துல்லியமாக பதிவு செய்து கொள்ளலாம். இது ரோந்து போலீசாருக்கு மிகவும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தும் போதும், குற்றச்செயல்கள் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தும்போதும் அந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்கள் இந்த கேமராவில் பதிவாகிவிடும். பின்னர் விசாரணைக்கு அந்த பதிவுகள் உதவியாக இருக்கும் என்றுதெரிவித்தார் மேலும்
திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்களில் மது விற்பவர்கள் மீதும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எந்த புகார் வந்தாலும் உடனடியாக போலீசார் ரோந்து சென்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி மாநகரில் அனுமதி இல்லாத பார்கள் எதுவும் கிடையாது. இவ்வாறு காவல்ஆணையர்கூறினார்.

சிறப்புநிருபர்.S.மணிகண்டன்.

Leave A Reply

Your email address will not be published.