கோவை மாவட்டம் மக்கள்விரோத குற்றசம்பவங்களை தடுக்க கடும்நடவடிக்கை SP.K.கார்த்திகேயன் IPS.

கோவை மாவட்டம் மக்கள்விரோத குற்றசம்பவங்களை தடுக்க கடும்நடவடிக்கை SP.K.கார்த்திகேயன் IPS.

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் IPS அவர்கள்…

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், IPS அவர்கள் தலைமையில் *மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் (Crime Review Meeting) (23.09.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இவ்விவாதிப்பு கூட்டத்தில் கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய குற்றவாளிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் *காவல் ஆய்வாளர்கள்-3, உதவி ஆய்வாளர்கள்-06, சிறப்பு உதவி ஆய்வாளர்கள்-8, தலைமை காவலர்கள்-05, முதல் நிலைக் காவலர்கள்-03, காவலர்கள்-17 என மொத்தம்-42 நபர்களை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவின் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளை பாராட்டி,பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மேலும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என SP.Dr.K.கார்த்திகேயன் IPS அவர்கள் அறிவுரை வழங்கினார்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்.

நிருபர்.P.நடராஜ்.

Leave A Reply

Your email address will not be published.