கோவை மாவட்டம் யானைதந்தம் மான்கொம்பு விற்க்கமுயன்ற நபர் கைது காவல்துறையினர் அதிரடி.

கோவைமாவட்டம்தொண்டாமுத்தூர் பகுதியில் யானை தந்தம் மற்றும் மான் கொம்புகளை விற்பனைக்கு கொண்டு சென்றவரிடம் பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,IPS அவர்கள் கோவை மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். தொண்டாமுத்தூர் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தொண்டாமுத்தூர், கெம்பனூர் பகுதிக்கு உடனடியாக விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள குட்டபுரி பேருந்து நிலையம் அருகே தணிக்கை செய்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நபரை விசாரணை செய்ததில், அவர் தொண்டாமுத்தூர் கெம்பனூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மகன் மதன்(29)என்பதும், அவர் சட்டத்திற்கு விரோதமாக யானை தந்தம்-1 மற்றும் மான் கொம்பு-2 ஆகியவற்றை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது. எனவே, அவற்றை பறிமுதல் செய்து மேற்படி மதனையும், தந்தம் மற்றும் மான் கொம்புகளை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
நிருபர்.P.நடராஜ்.


