கோவை மாவட்டம் கொலை குற்றவாளியை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல் துறையினரை பாராட்டிய SP.பத்ரிநாராயணன் IPS.

 

கோவை மாவட்டம் கொலை குற்றவாளியை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல்துறையினரை பாராட்டிய SP.பத்ரிநாராயணன் IPS.

- Advertisement -

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 28.12.2023 அன்று சூலூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பிரகாஷ் (32) என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துள்ளனர்.

மேற்படி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டதில், தனிப்படை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தனர்.

மேற்படி கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை காவல்துறையினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,IPS அவர்கள் (28.12.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

நிருபர்.P.நடராஜ்.

Leave A Reply

Your email address will not be published.