புறக்காவல் சாவடியை (Police Outpost) துவங்கி வைத்த கோவை மாவட்ட SP.பத்ரிநாராயணன் IPS.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் IPS அவர்கள் (23.06.2023) தடாகம் காவல் நிலைய பகுதியில் உள்ள கணுவாயில் புறக்காவல் சாவடியை (Police Outpost) துவங்கி வைத்தார்.
புறக்காவல் சாவடியை (Police Outpost) தொடங்கப்பட்டதன் நோக்கம் தடாகம் ரோடு, வடவள்ளி ரோடு மற்றும் துடியலூர் ரோடு சந்திப்புகளில் நடக்கக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனையை தீர்ப்பதற்காகவும், குற்றங்களை தடுப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவும் 26 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை கொண்ட பல நவீன வசதிகளை கொண்டு அமைக்கப்பட்ட புறக்காவல் சாவடியை (Police Outpost) துவங்கி வைத்தார். இவ்விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம், துடியலூர் காவல் ஆய்வாளர் திரு. ரத்தினகுமார், உதவி ஆய்வாளர் திரு. ஆறுமுக நயினார், காவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் என்றும், குற்ற செயல்கள் நடைபெறா வண்ணம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நிருபர்.P.நடராஜ்.