கோவை மாவட்டம் இணையதளம் மூலம் பணத்தை இழந்த பொது மக்களுக்கு பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் காவல் துறையினர்.

கோவை மாவட்டம், துடியலூர் பகுதியைச் சேர்ந்த திரு.செல்வகுமரன் KYC Update செய்வது தொடர்பாக வந்த குறுஞ்செய்தியை நம்பி, அதில் குறிப்பிட்டிருந்த லிங்கை கிளிக் செய்து அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூபாய்,98,653/- பணத்தையும், கருமத்தம்பட்டி பகுதியில் சேர்ந்த திரு.ராஜு என்பவர் India Mart Website -ல் போலியான விற்பனையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூபாய் 3,78,000/- பணத்தையும்,


மேலும்,பன்னிமடை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ லதா என்பவரின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 1,76,000/- பணத்தையும், கோவில்பாளையம் பகுதியில் சேர்ந்த திரு.விமல்குமார் ஆன்லைன் மூலம் போலியான விற்பனையாளரிடம் ரூபாய் 1,43,312/- பணத்தையும் இழந்துள்ளார்கள். மேற்படி பணத்தை இழந்த நபர்கள் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர் மூலம் முறையான நடவடிக்கை எடுத்து இதில் தொடர்புடைய வங்கி கணக்குகளில் இருந்த மொத்தம் ரூபாய் 11,95,965/- முடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் (06.06.2023) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து மேற்படி நபர்கள் ஆன்லைன் மூலம் இழந்த மொத்த பணத்தையும் அவரவரிடம் ஒப்படைத்தார்.
மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள் பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால்* 1930 *என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு* www.cybercrime.gov.in* என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார்.
நிருபர்.P.நடராஜ்.


