திருச்சி மாநகர காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கு குழந்தைகள் உரிமைகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி மாநகர காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவுவ சார்பில் குழந்தைகள்உரிமை குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி அரியமங்கலம் எக்விடாஸ் குருகுல மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் அங்கயல்கனி தலைமையில் 03.02.24 நடைபெற்றது.


சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு *குழந்தை உரிமையும் மனித உரிமையே* என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நான்கு வகையான உரிமைகள் வாழ்வதற்கான உரிமை வளர்வதற்கான உரிமை பாதுகாப்பிற்கான உரிமை பங்கேற்பதற்கான உரிமைகள் குறித்தும் பாலின சமத்துவம், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார். சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு பணிகள் கல்வியின் அவசியம் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காவல் உதவி ஆய்வாளர்கள் அழகிரிசாமி,முகமதுநபி ,காந்திமதி மற்றும் தலைமை காவலர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
சிறப்புநிருபர்.S.மணிகண்டன்


