கொடைக்கானலில் ரூபாய் 8கோடி மதிப்பிலானநல திட்டங்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர்.மு.க.ஸ்டாலின்.
கொடைக்கானலில் ரூபாய் 8கோடிமதிப்பிலானநலதிட்டங்கள் காணொளிவாயிலாக திறந்துவைத்தார் முதல்வர்.மு.க.ஸ்டாலின்.திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானலில் 8,கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு குழாம் , தினசரி சந்தை , அரசு மருத்துவமனை கட்டிடங்கள் காணொளி மூலம் முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது இங்கு தமிழக அரசின் மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் கொடைக்கானல் ஏரியில் நகராட்சி மூலமாக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு இல்லம் அமைக்கும் பணியானது தீவிரமாகும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அண்ணா சாலை பகுதியில் 3.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தினசரி சந்தை , அரசு மருத்துவமனை வளாகத்தில் 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் விடுதி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று முடிந்தது .
தொடர்ந்து இதனை மாண்புமிகுதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலமாக திறந்து வைத்தார் . தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் படகு இல்லத்தில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததை பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும் வருவாய்த்துறை மூலமாக இலவச பட்டாக்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
மேலும் வில்பட்டி பகுதியில் அமைய இருக்கு சுகாதார நிலையத்திற்கும் பூமி பூஜை போடப்பட்டது . நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் திரு.வேலுசாமி ,கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் திரு.செல்லத்துரை, திமுக நகர செயலாளர் திரு.முகமது இப்ராஹிம் , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
நிருபர்.R.குப்புசாமி.