போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மொத்தமாக சிம்கார்டுகள் வாங்கி வெளிநாட்டிற்கு அனுப்பிய வழக்கில் 8, பேர் கைது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடி.

 

சென்னை போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மொத்தமாக சிம்கார்டுகள் வாங்கி வெளிநாட்டிற்கு அனுப்பிய வழக்கில் 8, பேர் கைது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி.

திரு. அணில் குமார் AFRRO, Bureau of Immigration, Chennai International Airport ,என்பவர் அளித்த புகாரில் 16,06,2024 , ம் தேதி மலேசியா செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்த Lee Tiek Yien என்பவரை சோதனை செய்தபோது எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் 22,சிம்(simcard) கார்டுகள் வைத்திருந்ததாகவும் விசாரித்ததில் ஆன்லைன் ஸ்கேமில் ஈடுபடும் நபர்களிடம் விற்பனை செய்ய எடுத்து செல்வதாகவும் அவருக்கு துணையாக கணேசன், முகமது மனாசீர், செயல்படுவதாகவும் எனவே மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு மோசடி புலனாய்வு பிரிவில் (Forgery Intelligence Wing) வழக்கு பதிவு செய்து 1,Lee Tiek Yien என்பவரை கைது செய்து 17,06,2024 அன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

- Advertisement -

மேலும் மேற்படி வழக்கில் உரிய விசாரணை மேற்கொண்டு மற்ற குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சந்தீப்ராய் ரத்தோர் IPS அவர்கள் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் திருமதி. P.K. செந்தில் குமாரி IPS அவர்கள் ஆலோசனையின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் திருமதி. N.S. நிஷா IPS அவர்களின் மேற்பார்வையில் மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் திரு. சச்சிதானந்தம் அவர்கள் நேரடி கண்காணிப்பில் காவல் ஆய்வாளர் திருமதி. ஷீஜாராணி தலைமையிலான காவல் குழுவினர்தீவிரவிசாரணை செய்து இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளான 2, கணேசன் (மலேசியா) 3,Tan Ching Kun. (மலேசியா) 4, மகேந்திரன் (மலேசியா) 5, முகமது மனாசீர். (குன்னூர்) 6, ராம் ஜெய் (சேலம்) 7, சூரிய பிரகாஷ். மதுரை 8, ராஜ் பிந்தர் சிங்,(பஞ்சாப்) ஆகியோரை 18,06, 2024.அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களிடமிருந்து 550, சிம் கார்டுகள் 2, லேப்டாப், 33, பேங்க் அக்கவுண்ட் பாஸ்புக், செக் புக், 20, ATM. கார்டுகள் 23, மொபைல் போன்கள் BMW .Car. Malasian Currency 5485, Ringggits, Singapore Currency. 95, Dollers. ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மேற்படி குற்றவாளிகள் ஃபெடெக்ஸ் ஸ்கேம், டிரேடிங் ஸ்கேம், லோன் ஆஃப் ஸ்கேம் போன்ற இணைய வழி பண மோசடிகளில் பயன்படுத்துவதற்க்காக இந்த சிம்கார்டுகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது தெரிய வந்தது .

சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு மேற்கண்ட ஆன்லைன் பண மோசடி குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தமைக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சந்தீப்ராய் ரத்தோர் IPS அவர்கள் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

சிறப்பு நிருபர். LNK. சந்தன்.

Leave A Reply

Your email address will not be published.