தருச்சி மாவட்ட காவல்துறையில் ரோந்துகவலர்கள் களநிலவரம் கண்டறிய Body worm camera இயக்கம் SP.திரு.செல்வநாகரெத்தினம் IPS.துவக்கிவைத்தார்..
காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் ரோந்து பணி செய்துகொண்டிருக்கிறார்
என்பதையும். சம்பவ இடத்திற்கு எந்த ரோந்த வாகனத்தை உடனடியாக அனுப்பலாம் என்பதையும் அறிய Body worn Camera உதவியாக இருக்கும்
திருச்சி மாவட்டத்தில் புதிதாக வரப்பெற்ற 57 Body worn Camera-ஐ திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இரு சக்கர ரோந்து வாகன காவலர்கள் மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகன காவலர்களுக்கு வழங்கி தக்க அறிவுரை வழங்கினார்
திருச்சி மாவட்ட காவல் அலுவலத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரெத்தினம், இகாய, அவர்கள் புதிதாக வரப்பெற்ற 57 Body worn Camera-க்களை 44 இரு சக்கர ரோந்து வாகனங்களுக்கும், 11 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கும். கொள்ளிடம் மற்றும் திருவெறும்பூர்-க்கு வழங்கப்பட்ட நான்கு சக்கர ரோந்து வாகனங்களுக்கு கொடுத்தும் அதில் மூன்று வாகனம் ஒட்டுநர்களுக்கு Body worn Camera அணிவித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கி அதன் பின்னர் மேற்கண்ட வாகனங்களை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
i. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகன காவலர்கள் அவரவர் பணி துவங்கும் போது மேற்கண்ட Body worn Camera-வை Charge உள்ளதா என சரிபார்த்து பணியினை துவங்க வேண்டும்.
ii. எந்தவொரு தகவல்/பிரச்சனை சம்பந்தமாக விசாரணைக்கு செல்லும்போது Body worn Camera -ஐ On செய்து பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த பதிவுகள் அவரவருக்கு தற்காக்கும் விதமாக இருக்குமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கியுள்ளார்.
iii. தினந்தோறும் அவரவர் பணிமுடியும்போது காவல் நிலையங்களில் அதன் பதிவுகளை காவல் நிலைய கணிபொறியில் பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும்.
iv. இந்த Body worn Camera-வை பாதுகாப்பாக கையாளவும் மற்றும் காவலர்கள் கண்ணியத்துடன் பேசவும் அறிவுறுத்தப்படுகிறது.
V. இந்த Body worn Camera பதிவின் மூலம் பிரச்சனையின் போது காவல்துறை பொதுமக்களிடையே நடைபெறும் விவாதங்களுக்கு உண்மை நிலை காண ஏதுவாக இருக்கும்.
2) மேலும், இந்த Body worn Camera மூலம் ஒவ்வொருவரது இருப்பிடத்தை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க இயலும் எனவும், இதன் மூலம் காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் ரோந்து பணியினை செய்துகொண்டிருக்கிறார் என்பதையும். சம்பவ இடத்திற்கு எந்த ரோந்த வாகனத்தை உடனடியாக அனுப்பலாம் என்பதையும் இதன்மூலம் அறிய உதவியாக இருக்கும்
3) மேலும், பொதுமக்கள் ஏதேனும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க நேரிட்டால் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரெத்தினம், IPSஅவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தலைமைநிருபர்.S.வேல்முருகன்.