திருச்சி பெண்கள் மேல்நிலைபள்ளியில் பெண்குழந்தைகள் மாணவிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைபள்ளியில் குழந்தைகள் மாணவிகள் பாதுகாப்புகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 சர்வதேச குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு தினம்,
நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வாரத்தை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேனிலைப்பள்ளியில்
பெண்குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் மினலோச்சனி தலைமையில் 20.11.23 நடைபெற்றது.

- Advertisement -

சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகள் என்போர் தாயின் கருவறை முதல் 18 வயது பூர்த்தியாகும் வரை உள்ளவர்கள் அவர்களுக்கு வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை,
பாதுகாப்பிற்கான உரிமை பங்கேற்பதற்கான உரிமை என நான்கு வகையான உரிமைகள் உள்ளன என்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளான குழந்தை தொழிலாளர் பெண் சிசுக்கொலை குழந்தை கடத்தல் குழந்தைகளை வைத்து யாசகம் எடுத்தல் பாலியல் குற்றம் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் குழந்தை திருமண தடைச்சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் இளஞ்சிறார் நீதி சட்டம் குறித்தும் குழந்தைகளுக்கான 24 மணி நேரமும் செயல்படும் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண். 10 9 8,குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.

சாக்சீடு நிறுவனத்தின் இயக்குனர் திருமதி.பரிமளா, பெண் கல்வியின் அவசியம் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சமுதாயத்தின் பங்கு குறித்து பேசினார்.
ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.வனிதா சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் இணைய வழி குற்றங்கள் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினார் உதவி ஆய்வாளர்கள் திருமதி.கோகிலா, திருமதி.கலைச்செல்வி, சாக்கீடு குடும்ப நல ஆலோசகர்திரு. சசி, இல்ல கண்காணிப்பாளர் திரு.ஜெயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் 1200-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

சிறப்புநிருபர்.சே.மணிகண்டன்.

Leave A Reply

Your email address will not be published.