சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சிமாநகர காவல் துறைசார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சிமாநகர காவல் துறைசார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியை திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையம் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதை பொருள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் திருச்சி பெரிய மிளகு பாறை அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை கண்டோன்மென்ட் சரக காவல் உதவி ஆணையர் K.கென்னடி அவர்கள் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மேலும் போதைப் பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உதவி ஆணையர் கென்னடி, காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர்கள் மற்றும்உதவி ஆய்வாளர் ஹாய் கூகுள் கலந்துகொண்டு மாணவ செல்வங்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தினார்கள்
இப்பேரணி பள்ளியில் தொடங்கி மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) செல்வகுமார், பெரிய மிளகுபாறை அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி போதை பொருள் எதிர்ப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
இதே போன்று திருச்சி தேசிய கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து பதாகைகளுடன் மாணவர்கள் பேரணி சென்றனர். பின்னர் போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் குமார் தலைமை உரை ஆற்றினார். கண்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் போதைப் 2.0 பொருள் பயன்பாடு கலந்துள்ளது குறித்தும், போதைப் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் போது தான் சமூக வளர்ச்சிக்கான கதவு திறக்கப்படுகிறது. என்று பேசினார்.
பின்னர் கண்டோன்மென்ட் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகன் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வைத்து போதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி, ஓவியப்போட்டிகள் நடைபெற்றன.
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.