கடலோர பாதுகாப்பு காவல் குழுமம் சார்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலோர பாதுகாப்பு காவல் குழுமம் சார்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

காவல்துறை கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலம் கடற்கரை மீனவர்கள் ஒருங்கிணைப்பு விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் 18.7.2023 தேதி கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல்துறை இயக்குனர் கடலோர பாதுகாப்பு குழுமம் டாக்டர். சந்தீப் மிட்டல் IPS அவர்கள் தலைமையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

- Advertisement -

கலந்தாய்வு கூட்டத்தில் மீனவ கிராமங்களின் பிரச்சனை, மீனவர் பிரச்சினை குறித்தும் மீனவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மீனவர்களின் பிரச்சனை குறித்து அரசிடம் எடுத்து கூறி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும், தமிழ்நாடு காவல்துறை சார்பில் மீனவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்து வருவதாகவும், மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திறன் மேம்பாட்டு பயிற்சி காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டு வருவதாகவும் எடுத்து கூறினார்.

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த மீனவர்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், ஏதேனும் சட்டவிரோத செயல்களைப் பற்றி தகவல் தெரிந்தவுடன் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றபோது அனைத்து அரசு துறையினரும் இணைந்து செயல்பட்டால் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் காவல்துறை இயக்குனர்டாக்டர். சந்தீப் மிட்டல் IPS அவர்கள் எடுத்து கூறினார்.

சிறப்புநிருபர்.P.முத்துக்குமரன்.

Leave A Reply

Your email address will not be published.