காங்கேயம் காவல் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான்

காங்கேயம் காவல் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான்

திருப்பூர்மாவட்ட்ம் காங்கேயம் காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளிடையே தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 8.10.2023 ஞாயிறு அன்று நடைபெற்றது.

 

- Advertisement -

இந்நிகழ்வை காங்கேயம் *துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் தொடங்கி வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் சிறப்புகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார், இந்நிகழ்ச்சியில் காங்கேயம் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.காமராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் திரு சந்திரன், கார்த்திக், சத்தியமூர்த்தி உட்பட பல காவல் துறையினர் கலந்து கொண்டனர்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் ஏற்பாடுகளை காங்கேயம் காவல் துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் பாரட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.காங்கேயம் காவல் துறையின் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சி, காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது…

நிருபர் R. பழனிசாமி.*

Leave A Reply

Your email address will not be published.