மதுரைBLOOD DONOR’S CLUB சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் காவல்ஆணையர்.J.லோகநாதன் IPS. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மதுரைமாநகரில் (24.11.2024) மதுரை மருத்துவக் கல்லூரி BLOOD DONOR’S CLUB சார்பாக, உதிரம்’2024 என்கிற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 8.7 கிலோமீட்டர் இரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மதுரை மாநகர காவல்ஆணையர்.J.லோகநாதன் IPS. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்ததுடன் அதில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்வதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) அவர்கள் , மற்றும் காவல்துறை அதிகாரிகள், மருத்துவக்கல்லூரி ஆசியர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் , இரத்ததான தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாநகர காவல் ஆணையர் அவர்களால் போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
சிறப்புநிருபர்.J.பீமராஜ்.