முருகன்கோவில் வளாகத்தில் சமூகவிரோதிகள் அட்டூழியம் நடவடிக்கை எடுக்க கோரிபொதுமக்கள்சாலைமறியல்.
திருச்சி மாநகர் எடமலைப்பட்டி புதூர் பட்டி ரோட்டில் இருந்து ராமச்சந்திர நகர் செல்லும் வழியில் பட்டா இடத்தில் முருகன் கோவில் உள்ளது அந்த கோவில் வளாகத்தில் சமூக விரோதிகள் மாலை வேலைகளில் மது அருந்துவது தவறான வழிகளில் நடப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாலும் பக்தர்கள் வழிபாடு செய்ய பெரும் இடையூறாக இருப்பதால் கோவில் வளாகத்தை சுற்றி கோவில் இடத்தில் (காம்பவுண்ட்) சுற்றுச்சுவர் எடுக்க அனுமதி வாங்கி சுற்றுச்சுவர் எடுத்ததை சமூக விரோதிகள் சேர்ந்து அதை இடித்து விட்டார்கள்.
இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் கொடுத்தும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் நடப்பதாக பொதுமக்கள் இன்று 29-01-24 காலை எடமலைப்பட்டி புதூர் பாலம் இரண்டு பகுதி ரோட்டிலும் பெண்களும் ஆண்களும் அந்த கோவில் பகுதியில் சுற்றியுள்ள பக்தர்களும் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் பொதுமக்கள் திரளாக திரண்டு சாலை மறியல் திடீரென்று நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு காவல்துறையினர்குவிக்கப்பட்டனர்.
அதற்குப் பிறகு எங்களுக்கு அந்த கோவில் வளாகத்தில் எந்த சமூக விரோத செயலும் நடைபெறாமல் தடுக்க நாங்கள் சுற்றுச்சுவர் எடுக்க ஆவண செய்ய வேண்டும் அதற்கு தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள் பெரும்பரபரப்பு ஏற்ப்பட்டதால் அதற்கு அப்புறம் வட்டாட்சியர், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறைஅதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து பின்பு எடமலைபட்டி புதூர் மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம் உள்ப்பட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இடிக்கப்பட்ட சுவர் கட்டித் தருவதாகவும் அதற்கு தடையாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் ரோடு மறியல் கைவிடப்பட்டது .
இதுபோன்று வழிபாட்டு தலங்களில் சமூக விரோத செயல்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது .
நிருபர்.G.சிவபிரகாசம்.