கொடைக்கானலில் காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காவல்துறை சார்பில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

- Advertisement -

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காவல் துறையின் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது . பேரணியானது ஏரிச்சாலை பகுதியில் இருந்து துவங்கியது .

இதனை காவல்துறை துணை கண்காணிப்பாளர்DSP. திருமதி.மதுமதி மற்றும் காவல் ஆய்வாளர் திரு.பாஸ்கரன் துவங்கி வைத்தனர். இதில் பள்ளி மாணவர்கள் திரளாககலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக ஏரிச்சாலை பகுதியில் இருந்து பேருந்து நிலைய பகுதி , அண்ணா சாலை வழியாக மூஞ்சிக்கல் பகுதி வரை சென்றனர். தொடர்ந்து போதைபொருள் உபயோகத்தை ஒழிப்போம் எனவும் மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது எனவும் கோஷமிட்டனர் . இந்த நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

நிருபர்.R.குப்புசாமி.

Leave A Reply

Your email address will not be published.