திருச்சிமாநகரம் பள்ளிமாணவர்களுக்கு போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருச்சி மாநகரம் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி உதவி தலைமை ஆசிரியர்
திருமதி.வைலட்செல்வி அவர்கள் தலைமையில் 12.11.24 நடைபெற்றது.
மாநகர காவல் துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்ஆய்வாளர் திருமதி.வசுமதி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஆகியோர் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் உடல் அளவிலான மன அளவிலான பாதிப்புகள் குறித்தும் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குற்றங்கள் மற்றும் கல்வியின் அவசியம் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள்.
பள்ளி அளவிலான போதைப் பொருள் தடுப்புக் குழு மூலமாக மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு சம்மந்தமான புகார் தகவல்கள் குறித்த புகார் பெட்டி வழங்கப்பட்டு போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதுகலை ஆசிரியர் திரு.எபினேசர் வரவேற்றார் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.வனிதா நன்றி கூறினார் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 4000, க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
சிறப்பு நிருபர்சே,மணிகண்டன்