திருச்சி மாநகர காவல்துறைசார்பாக மாணவர்களுக்கு போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி மாநகர காவல்துறைசார்பாக மாணவர்களுக்கு போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், போதைப்பொருள்கள் இல்லா தமிழ்நாட்டை (Drug Free Tamil Nadu) உருவாக்க இளைஞர்களின் நலனை காக்க ‘போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி“ திருச்சி மாநகரில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”-  (Drug Free Tamil Nadu) உருவாக்கும் சீரிய நோக்கில், 12.08.2024-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களுக்கிடையே “போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” ஏற்றிடுமாறு உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் “போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி”யை எடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

- Advertisement -

அதன்படி, 12.08.2024-ந்தேதி காலை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் பங்கு பெற்ற நிகழ்ச்சியானது காணொளி வாயிலாக போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க உறுதிமொழியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வாசித்தபோது, அவர்களுடன் இணைந்து திருச்சி மாநகரத்தில் மாநகர காவல்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 91, பள்ளிகள் மற்றும் 11, கல்லூரிகளில் சுமார் 26000 மாணாக்கர்கள் போதை பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

மேலும், வயலூர்ரோட்டில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி கூட்ட அரங்கில் நடந்த அரசு விழாவில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.N.காமினி, IPS., அவர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் திரு.A..பிரதீப்குமார், IAS, அவர்கள், திருச்சி மாநகர மேயர் திரு.அன்பழகன் அவர்கள், ஸ்ரீரங்கம் மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் சுமார் 1000, மாணாக்கர்கள் இணைந்து போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

தலைமைநிருபர்.மு.பாண்டியராஜன்.

Leave A Reply

Your email address will not be published.