திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பிஷப்ஹீபர்கல்லூரி யில் மாணவர்களுக்கு போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பிஷப்ஹீபர் கல்லூரியில் மாணவர்களுக்கு போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி மாநகர் பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் 01.08.2023-ந் தேதி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே ‘போதைபொருள்களின் தீமைகள் குறித்தும், போதை பொருள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி“ நடைபெற்றது.


இந்நிகழ்ச்சி பரதநாட்டியத்துடன் துவங்கி, போதை பொருள்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்தும், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்து போலீஸ்பார்வைகுழுமம் சார்பாக S .வேல்முருகன் நாடக குழுவினரின் அழிவின்ஆரம்பம் என்ற நாடகம் நடைபெற்றது மற்றும் மாணவர்களால் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் போதை பொருள் விழிப்புணர்வு குறித்து மாணவ மாணவர்களிடையே பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப்போட்டி, பாட்டுபோட்டிகள் நடத்தப்பட்டு,திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்ய பிரியா, IPS அவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கி விழிப்புணர்வு உரையாற்றினார்கள்.


இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 1200 பேர் கலந்து கொண்டார்கள். கஞ்சா மற்றும் இதர போதை பொருட்களை ஒழிப்பதற்கான உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே இளைஞர்களையும், சமுதாய சீரழிவையும் ஏற்படுத்தும் வகையில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு பிரத்யேக வாட்ஸ் ஆப் 96262-73399 என்ற எண்ணிற்கும், காவல்துறை அவசர உதவி எண்களான 100-க்கும், தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின்; விவரம் ரகசியம் காக்கப்படும் எனதிருச்சிமாநகரகாவல்துறைசார்பாக தெரிவித்தார்கள்.நிகழ்ச்சியில் திருச்சிமாநகர காவல்அதிகாரிகள் கலந்துக்கொண்டார்கள்.
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.


