திருச்சி மாநகரகாவல் காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கு போதைபொருள் தடுப்பு மற்றும் பாலியல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாநகரகாவல் காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கு போதைபொருள் தடுப்பு மற்றும் பாலியல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.

10.08.23 திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.காமினி IPS அவர்களின் உத்தரவின்படி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.அஜிம் தலைமையில் whc. 977,wgr1, 295 ஆகியோர் இணைந்து திருச்சி அண்ணா ஸ்டேடியம் வளாகத்தில் மாணவ மாணவிகளின் எதிர்கால நலன் கருதி விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.


பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு பற்றியும் , குழந்தை திருமணம் பற்றியும், குழந்தை கடத்தல் பற்றியும்,மாணவர்களுக்கு போதைபொருள் உபயோகத்தின் தீமை பற்றியும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 பற்றியும்,மற்றும் பெண்களுக்கான தொலைபேசி எண் 181, குறித்தும் எப்படி பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்பதை பற்றி காவல்ஆய்வாளர் அஜிம் அவர்கள் எடுத்துரைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப பட்டது.
தலைமைநிருபர்.நா.ராக்கேஷ்சுப்ரமணி.


