திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் 50,ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அனைத்து கைவினைப் பொருட்கள் கண்காட்சி ஆரம்பம்.

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் 50,ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அனைத்து கைவினைப் பொருட்கள் கண்காட்சி ஆரம்பம்.

 

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் 50,ம் ஆண்டு
பொன்விழாவை முன்னிட்டு அனைத்து கைவினைப் பொருட்கள் கண்காட்சியை திருச்சிமாநகர காவல் ஆணையர் M.சத்ய பிரியா IPS அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

- Advertisement -

அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழக பூம்புகார் என்ற பெயரில் அனைவராலும் அறியப்பட்ட கைத்தறி உலகில் தனி ஒரு முத்திரை பதித்து செம்மையாக செயல்படும் ஒரு நிறுவனம், நமது பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு இவைகளை கைவினை கலைகள் மூலம் பேணி காப்பதோடு, கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும், வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு பல விருதுகளை கொடுத்து ஊக்குவித்து மற்றும் இக்கைவினை கலைகள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஓர் அரசு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

மாநகர மக்களின் பேராதரவோடு 49, வருடங்களை வெற்றிகரமாக கடந்து ஐம்பதாவது (50)வருட பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது, அதனை முன்னிட்டு, பூம்புகார் விற்பனை நிலையம் பொன்விழா ஆண்டை மிகச் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து கைவினைப் பொருட்கள் கண்காட்சியை 25.7.2023 முதல் 10.8.2023 வரை நடத்த திட்டமிட்டு உள்ளன, அந்த வகையில் திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் அனைத்து கைவினைப் பொருட்கள் கண்காட்சியை திருச்சிமாநகரகாவல் ஆணையர் M.சத்திய பிரியா IPS அவர்கள் 28/7/2023 வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார்.

கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தோடும்,
பொது மக்களுக்கு கைவினை கலைகளில் மூலம் நேரடியாக விற்பனை செய்யவும் வாய்ப்பாகவும், பூம்புகார் நிறுவனம் இக்கண்காட்சியை நடத்துகின்றது. இக்கண் காட்சியில் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ள பல்வேறு கைவினை பொருட்களை திருச்சி மாநகரம் மக்கள் வாங்கி தங்கள் இல்லத்தில் அழகூட்டி மகிழ அன்புடன் அழைக்கின்றோம் என்று திருச்சி பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி மேலாளர் கங்காதேவி தெரிவித்துள்ளார்.

தலைமைநிருபர்.S.வேல்முருகன்.

Leave A Reply

Your email address will not be published.