ஏப்ரல் 19,நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கொடைக்கானலில் துணை ராணுவப்படையினர்,காவல்துறையினர் ஒத்திகை மற்றும் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்
ஏப்ரல் 19,2024,நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கொடைக்கானலில் துணை ராணுவப்படையினர்,காவல்துறையினர் ஒத்திகை மற்றும் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர் .

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19,2024, ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள்அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க பாதுகாப்பு ஒத்திகைகள் மற்றும் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் துணை ராணுவப் படையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் இணைந்து ஒத்திகை மற்றும் கொடி அணிவகுப்பு நடத்தினர் .

அணிவகுப்பானது நாயுடுபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக ஏரிச்சாலை , கலையரங்கம் பகுதி , பேருந்து நிலையப் பகுதி , அண்ணா சாலை வழியாக மூஞ்சிக்கல் பகுதி வரை சென்றனர் . 100% வாக்களிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கும் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிருபர்.R.குப்புசாமி.


