திருவள்ளூர் சாலைவிபத்தில் உயிரழந்த வர்கள்உடலைவாங்கமறுத்து போராட்டம் அமைதியாகபேசி தீர்வுகண்ட ADSP.G.ஹரிகுமார்
திருவள்ளூர்மாவட்டம் சாலைவிபத்தில் உயிரழந்த வர்கள் உடலைவாங்கமறுத்து உறவினர்கள் போராட்டம் அமைதியாகபேசி தீர்வுகண்ட ADSP.G.ஹரிகுமார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த மகான்காளிகாபுரத்தில் இருந்து திருத்தணி செல்லும் அரசு பேருந்து KG கண்டிகை மெயின் முக்கிய சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே அதி வேகமாக வந்த டிப்பர் லாரி நிலைதடுமாறி பேருந்தின் மீது மோதியதும் பேருந்தில் பயணம் செய்த அம்மையார் குப்பத்தைச் சேர்ந்த மகேஷ், முரளி, பாண்டுரங்கன், சிவானந்தம், ஆகியோர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் ஒரு சிலர்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்தவர்களையும் மற்றும் இறந்தவர்களின் சடலங்கள் என 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
டிப்பர் லாரி ஓட்டுனரை கைது செய்ய கோரியும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நியாயம் கேட்டும் இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவ மனையில் இருந்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடு பட்டனர். திருத்தணி காவல் உதவி கண்காணிப்பாளர் மற்றும் திருத்தணி காவல் ஆய்வாளர் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றநிலையில், தகவல் அறிந்த காவல் துறை உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில்
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.SP. திரு. சீனிவாச பெருமாள் அவர்களின் மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ADSP.G. ஹரிக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சம்பந்த பட்டவர்களின் வீடுகளுக்கேச் சென்று ஆறுதல் கூறினார்.
நள்ளிரவிலும் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தினார். மறுநாள் இறந்தவர்களின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைத்து உடனிருந்து அமைதியான முறையில் இறுதி சடங்கு நடைபெற பெரிதும் உறு துணையாக இருந்தார். தக்க சமயத்தில் சாதுர்யமாக செயல் பட்டு பிரச்சினையை அமைதியாகபேசி தீர்வு கண்ட மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ADSP. G.ஹரிக்குமார் அவர்களுக்கும் காவல் துறை உயரதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
நிருபர்.AR.முருகேசன்.