சென்னை பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாககூறி ஜாதிபெயரை சொல்லி தட்டிகழித்த வாலிபருக்கு ADSP G.ஹரிகுமார் அவர்களின் தொடர் நடவடிக்கையால் சிறை.
சென்னை பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாககூறி ஜாதிபெயரை சொல்லி தட்டிகழித்த வாலிபருக்கு ADSP G.ஹரிகுமார் அவர்களின் தொடர் நடவடிக்கையால் சிறை.
சென்னைபட்டதாரி பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம்.ஜாதி பெயரை சொல்லி ஏமாற்றிய வாலிபருக்கு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஐந்து ஆண்டுகள் சிறை..
*திருவள்ளூர் மாவட்ட ADSP G.ஹரிகுமார் அவர்களின் தொடர் நடவடிக்கையால் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி டி.வி.புரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் இவர் தனியார் நிறுவன ஊழியர் இவருக்கும், மற்றொரு தனியார் நிறுவனத்தில் வங்கி கணக்காளராக பணிபுரிந்து வந்த வியாசர்பாடியை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.திருமணம் செய்து கொள்வதாக கூறிய ரமேஷ், அந்த பெண்ணிடம் நகை, பணம்,மொபைல் போன் போன்றவற்றை அபகரித்துள்ளார்.மேலும் ஆசை வார்த்தை கூறி அவருடன் அடிக்கடி மிகநெருக்கமாக இருந்துள்ளார். பின் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த ரமேஷ், அவரது ஜாதியை குறிப்பிட்டு அநாகரிகமாக பேசியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் எம்.கே.பி.நகரில் உதவி ஆணையராக பணியாற்றிய தற்போதைய திருவள்ளூர்மாவட்ட காவல்துறை ADSP.G. ஹரிக்குமார் அவர்கள் வழக்கை பதிவு செய்து. ரமேஷ் மீது 2020ம் ஆண்டு மோசடி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்.
சென்னை வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி S..அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் M. சுதாகர் ஆஜராகி வாதாடினார்.வழக்கை விசாரித்த நீதிபதி, ரமேஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபித்துள்ளது எனக்கூறி, ரமேஷுக்கு 5, ஆண்டு சிறை தண்டனை, 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.2020 ல் சென்னை பெருநகர காவல் MKB.நகரில் உதவி ஆணையராக பணியாற்றியவரும் தற்பொழுது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை ADSP யாகபணியாற்றி வரும் G. ஹரிக்குமார்அவர்கள்தீவிரவிசாரணை மேற்க்கொண்டு வழக்கை பதிவு செய்தார் 4 ஆண்டுக்குப் பிறகு வழக்கை முடித்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதியை பெற்று தந்த திருவள்ளூர் ADSP க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
நிருபர்.AR.முருகேசன்.