சமயபுரம் அருகே கோர விபத்து, அப்பளம் போல் நொறுங்கிய கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

சமயபுரம் அருகே கோர விபத்து, அப்பளம் போல் நொறுங்கிய கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

சமயபுரம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில், புள்ளம்பாடி சேர்ந்த கந்தசாமியின், மகன் முருகேசன் என்பவர் தனது TN 46 F 1312 இண்டிகா வாகனத்தில் நண்பர்களுடன் புள்ளம்பாடியில் இருந்து, திருச்சி நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது, பெரம்பலூரில் இருந்து ஜல்லி ஏற்றுக்கொண்டு TN 48 J 1886 எண் கொண்ட டிப்பர் லாரி ஓட்டுநர் வலது புறத்தில் சென்று கொண்டிருந்தர், இடதுபுறம் இண்டிகா கார் வருவது தெரியாமல் திடீரென்று இடது புறம் மாறியதால், இண்டிகா காரை இடித்து பாலத்தின் மேல் தள்ளியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது,

- Advertisement -

விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்று விட்டார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் NHAI தேசிய நெடுஞ்சாலை துறையினர் விபத்துக்கு உள்ளானவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அதிர்ஷ்டவசமாக காரினை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உடன் வந்தவர்களுக்கு லேசான காயத்துடன் உயிர்த்தபினர்.

டிப்பர் லாரியை கைப்பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், NHAI தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீரமைத்தனர்.

தலைமை நிருபர்.S.வேல்முருகன்

Leave A Reply

Your email address will not be published.