போலீஸ்பார்வை குழுமம் மகாத்மா கண்மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சைமுகாம்.
போலீஸ் பார்வைமாத இதழ் குழுமம், மகாத்மா கண் மருத்துவமனை, திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், இணைந்து நடத்திய இலவச( கண்புரை அறுவை சிகிச்சை) மற்றும் கண் சிகிச்சை முகாம் மற்றும் பரம்பரை தொடு வைத்திய முறைப்படி மனித உடலில் உள்ள உடல் உறுப்புகள் குறைபாடுகளை பரம்பர வைத்திய முறைப்படி நாடி பிடித்து உள்ளதை உள்ளபடியாக தத்ரூபமாக சொல்லக்கூடிய டாக்டர் நந்தகுமார் அவர்களின் பரம்பரை தொடு வைத்திய சிகிச்சையும் திருச்சி கிராப்பட்டி புனித தோமையர் கருணை இல்ல வளாகத்தில் 27- 10 -2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் கருணை இல்ல சிஸ்டர்ஸ் ஆதரவில் வாழ்ந்து வரும் பெண்கள் ஆண்கள் முதியோர்கள் உட்பட மற்றும் வெளியிலிருந்து கண் சிகிச்சைக்காகவும் தொடு வைத்திய சிகிச்சைக்காகவும் வருகைதந்த பொதுமக்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் இந்த மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமிலும் பரம்பரை தொடுவைத்திய முகாமிலும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயன் பெற்றார்கள். கண் சிகிச்சை முகாமில் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து கண் சிகிச்சை மேற்கொண்டு கண்ணாடிக்கு எழுதிக் கொடுத்தது மற்றும் கண் உரை அறுவை சிகிச்சைக்கு சுமார் 20க்கு மேற்பட்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டு மகாத்மா கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமில் மகாத்மா கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டு முழு ஈடுபாடுடன் கண் நோய் சம்பந்தமான பரிசோதனை செய்து மக்கள் பயன் பெற சிகிச்சை அளித்தனர். பரம்பரை தொடு வைத்திய முறைப்படி Dr.நந்தகுமார் அவர்கள் பொதுமக்களின் நாடி பிடித்து பார்த்து அவர்கள் உடல் உறுப்புகள் மற்றும் நோய் தன்மையை சரியாக சொல்லி தீர்வுகாண அதற்கான உணவு முறை சிகிச்சை மேற்கொண்டு ஆரோக்கியத்துடன் வாழ அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமினை கருணை இல்ல சிஸ்டர்.சரோஜா அவர்களும் சிஸ்டர். ரீத்தா சூசை அவர்களும் துவக்கி வைத்தனர்.
முகாமில் போலீஸ் பார்வை ஆசிரியர் வெளியீட்டாளர்.Dr. பாலகிருஷ்ணன் மற்றும் முதன்மை ஆசிரியர் வழக்குரைஞர் K.T. சிவகுமார் அவர்களும் இணைஆசிரியர் U. மதனகோபால் மற்றும் தலைமை நிருபர்கள் S. வேல்முருகன், M.பாண்டியராஜன் சிறப்பு நிருபர்கள். எஸ் மணிகண்டன் B. குணசேகரன், நிருபர்கள் திரு. பாலமுருகன் S. ஜானகி B. ஶ்ரீனிவாசன், திரு. சண்முகராஜ்,திரு.பாருக் கலந்துகொண்டு சிகிச்சைக்காக வருவதை தந்தவர்களை வரவேற்று அவர்கள் சிகிச்சை பெற உதவி செய்து முகாம் சிறப்பாக நடைபெற செயலாற்றி சிறப்பித்தனர்.
அனைவரது ஒத்துழைப்போடும் போலீஸ் பார்வை குழுமம் நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பரம்பரை தொடுவைத்திய சிகிச்சை முகாமும் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.