திருச்சி உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.80 க்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் விற்பனையை துவக்கி வைத்தார்
திருச்சி உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.80 க்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்IAS விற்பனையை துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டு உள்ளது. இதனை சமாளிக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகள் மேற்க்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தோட்டக்கலைதுறை சார்பில் உழவர் சந்தைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தையில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது.
இதற்கான கடைகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கிலோ 80 ரூபாய் என்ற விலை தக்காளி விற்பனையினை அவர் தொடங்கி வைத்தார்.
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.


