அரியலூர் போதைபொருள் கள்ளச்சாராய விற்பனைதடுக்க தொலைபேசி மூலம் தகவலுக்கு SP.அதிரடி நடவடிக்கை.

ஒரு மாதமாக செயல்பட்டு வரும் கள்ளசாராயம் மற்றும் கஞ்சா விற்பனை குறித்த தொலைப்பேசி எண்ணிற்கு வந்த 150 அழைப்புகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறார் SP.பைரோஸ்கான் அப்துல்லா அவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
அரியலூரில்மாவட்டத்தில் கள்ளச்சாராயம்,கஞ்சா, கள் விற்பனை, போதைப் பொருட்கள் மற்றும் அரசு மதுபானத்தை கள்ளத்தனமாக விற்பனை செய்தல் போன்ற மதுவிலக்கு குற்றங்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் ரகசிய தகவல் தெரிவிக்க வசதியாக சிறப்பு தனி தொலைபேசி எண்ணை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் வெளியிட்டிருந்தார்.
இதன் மூலம் அரியலூர் மாவட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம்,கஞ்சா,
கள்விற்பனை மற்றும் அரசு மதுபானத்தை கள்ளத்தனமாக விற்பனை செய்தல், வெளிமாநில மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், எடுத்துச் செல்பவர்கள், வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 94896-46744 என்ற செல்போன் எண்ணிற்கு அழைத்தோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இந்த எண் ஆனது முழுவதுமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும்.இதனை அரியலூர் மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிருபர்.ம.மகேஷ்.


