திருச்சி புகாரின்பேரில் பிரபல ஐஸ்கிரீம் கடை ,துணிக்கடை உணவகம் சீல்வைப்பு உணவுபாதுகாப்பு துறைஅதிரடி.
திருச்சிமாநகரில் பிரபல ஐஸ்கிரீம் கடை மற்றும் பிரபல துணிக்கடை உணவகம் தற்காலிக உணவு விற்பனை நிறுத்தம்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்


மத்திய தபால் நிலையம் எதிரில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் நிறுவனத்தில் பிறந்தநாள் விழாவிற்காக கேக்கு வாங்கியதில் அது மிகவும் மோசமாக இருந்ததாக கேக் வாங்கிய நபர் புகார் அளித்தார் அதற்கு கடை உரிமையாளர் பணத்தை திரும்பத் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் அதற்கு அந்த நபர் சாப்பிட்ட குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்று கேட்டு இருக்கிறார் அதற்கு கடைக்காரர் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று உதாசினமாக பதில் அளித்திக்கிறார் பின்னர் அந்த பதிவை முகநூல் பக்கத்தில் அந்த நபர் பதிவு ஏற்றம் செய்தார் அதைத்தொடர்ந்து போலீஸ் பார்வை நிருபர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிய தொடர்பு கொண்டு தெரிவித்தார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் பின்னர் 17.06.2023 அன்று சனிக்கிழமை மத்திய தபால் நிலையம் எதிரில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் நிறுவனம் மற்றும் பொதுமக்களிடம் வந்த புகாரின் பேரில் மெயின் கார்ட் கேட்டில் உள்ள பிரபல துணிக்கடையில் உள்ள உணவகம் ஒன்றிலும் ஆய்வு செய்ததில் அந்த இரண்டு உணவகத்தின் உணவு தயாரிக்கும் இடங்கள் மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரம் அற்ற முறையிலும் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வந்து செல்லும் வண்ணம் இருந்தது கண்டறியப்பட்டு அந்த இரண்டு உணவு கூடத்தின் உணவு விற்பனை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது

மேலும் அந்த இரண்டு கடைகளுக்கும் அங்குள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் பிரிவு 55 இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது அந்தக் குறைகளை நிவர்த்தி செய்த பின்னரே உணவு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டு சட்டபூர்வ உணவு மாதிரியும் அபராத தொகையும் விதிக்கப்பட்டது தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் இருந்த உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்து வந்த நந்தி கோயில் தெருஅருகே உள்ள பிரபல டீக்கடை மற்றும் பேக்கரி உணவுபாதுகாப்புதுறை மாவட்டநியமன அலுவலர் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது
பொதுமக்கள் அனைவரும் உணவு விற்பனை செய்யும் இடங்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் விற்பனை செய்தாலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறினார்
டாக்டர். R. ரமேஷ் பாபு.,M.B.B.S.,DA.,
மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
புகார் எண்
9944959595
9585959595 .
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.


