மன அழுத்தமின்றி பணியாற்ற் மருத்துவ கல்லூரியில் பயிற்சிமுடித்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு SP.R.ராஜாராம் பாராட்டு.

 

- Advertisement -

தமிழ்நாடு காவல்துறை சார்பாக கடலூர் மாவட்ட காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பெங்களூரில் உள்ள
*National Institute of Mental Health and Neuro Science* என்ற மருத்துவ கல்லூரியில் ஒரு வார காலம் பயிற்சி முடித்து
2019, 2020 ஆம் ஆண்டுகளில்
கடலூர் மாவட்ட காவல் துறையினருக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சி அளித்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் திருமதி ஜெயதேவி, திருமதி கனகவல்லி ஆகியோர் தங்களது திறனை மேலும் வளர்க்கும் பொருட்டு தற்பொழுது * டிப்ளமோ இன் சைக்காலஜி போலீஸ் வெல்பீயிங்* என்ற பட்ட படிப்பை ஆறு மாத காலம் பயின்று அதற்கான சான்றிதழ்களை சென்னை தலைமை காவல்துறை இயக்குனர் DGP.Dr.C. சைலேந்திரபாபு IPS அவர்களிடம் பெற்றனர். டிப்ளமோ முடித்த உதவி ஆய்வாளர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இராஜாராம் அவர்கள் பாராட்டி  வாழ்த்து தெரிவித்தார்.

சிறப்புநிருபர்.P.முத்துக்குமரன்.

Leave A Reply

Your email address will not be published.